தூத்துக்குடி தாளமுத்துநகரில் நடந்த கொலை முயற்சி வழக்கில், சாமுவேல்புரத்தை சேர்ந்தஅந்தோணிராஜ் (24) கைது செய்யப்பட்டார். இதுபோல், மடத்தூர் அருகே கொலை முயற்சியில் ஈடுபட்ட தம்பிக்கைமீண்டான் பகுதியைச் சேர்ந்த ஜெயமுருகன் (45) கைது செய்யப்பட்டார். மாவட்ட எஸ்பி எஸ்.ஜெயக்குமார் பரிந்துரையின் பேரில், இவர்கள் இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய, மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் உத்தரவிட்டார்.