தூத்துக்குடி தபால் தந்தி காலனி 11-வது தெருவைச் சேர்ந்த முகைதீன் அப்துல்காதர் மகன் முஷ்ரப் (19). இவர், தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். முஷ்ரப் தனது மோட்டார் சைக்கிளில் 3-வது மைல் அருகே நேற்று சென்று கொண்டிருந்தார். எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்த முஷ்ரப் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தென்பாகம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில்பட்டி