Regional01

இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் அடுத்த ரெட்டியார் பாளையம் கிராமத்தில் வசிக்கும் பெண்ணுக்கு, அதே கிராமத்தைச் சேர்ந்த கேசவன்(23) என்பவர் கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொலை மிரட்டல் விடுத் துள்ளார்.

அப்போது அவர், அந்த பெண்ணின் கையை பிடித்து இழுத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மங்கலம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து கேசவனை கைது செய்தனர்.

இந்த வழக்கின் மீதான விசாரணை தி.மலை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. சாட்சிகள் விசாரணை முடிந்து நேற்று முன் தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், கேசவனுக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.11 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி விக்னேஷ் பிரபு உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT