Regional04

கரோனா விழிப்புணர்வு வாகன பிரச்சாரம்

செய்திப்பிரிவு

நீலகிரி மாவட்ட கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் நல்வாழ்வுகுடும்ப நலத் துறை சார்பில், கரோனா விழிப்புணர்வு வாகனத்தை ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தொடங்கிவைத்து, விழிப்புணர்வு குறும்படங்களை பார்வையிட்டார்.

பின்னர் அவர் கூறும்போது, “ஏற்கெனவே செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் அதிநவீன மின்னணு வாகனத்தின் மூலம் குறும்படங்கள் வாயிலாக விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டுவருகிறது. தற்போதுதொடங்கிவைக்கப்பட்ட இந்த வாகனத்தின் மூலம் நமது மாவட்டத்திலுள்ள 35 ஊராட்சிக்குட்பட்ட 1284 கிராமங்களிலும், 11 பேரூராட்சிக்குட்பட்ட 540 கிராமங்களிலும், உதகை, குன்னூர், கூடலூர் ஆகிய 3 நகராட்சிக்குட்பட்ட 108 வார்டு பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு கரோனா தொற்று நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது” என்றார்.

சுகாதார பணிகள் துணை இயக்குநர் பாலுசாமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT