தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.(வலது)நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகம் முன் தர்ணா நடைபெற்றது. படம்: என்.ராஜேஷ் 
Regional02

அங்கன்வாடி ஊழியர்கள் தர்ணா

செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் அங்கன்வாடி ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

`அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக்கி முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சட்டபூர்வ ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வுபெறும்போது கருணைத் தொகையாக அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரூ.10 லட்சம், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும்’ என வலியுறுத்தப்பட்டது.

சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஏ.மரியம்மாள் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ஜெயலட்சுமி முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் எம்.சந்திரா, சிஐடியு மாநிலச் செயலாளர் ஆர்.ரசல், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பி.பூமயில் ஆகியோர் பேசினர்.

நாகர்கோவில்

சிஐடியு மாநில குழு உறுப்பினர் இந்திரா, சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் லீமாறோஸ், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் கிறிஸ்டோபர், சிஐடியு மாவட்ட தலைவர் சிங்காரன், மாவட்ட பொருளாளர் சித்ரா, மாநில குழு உறுப்பினர் பெருமாள், மாவட்ட துணைத்தலைவர் சந்திரபோஸ், மாவட்டச் செயலாளர் கே.தங்கமோகன் பேசினர்.

அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் சரோஜினி நன்றி கூறினார்.

SCROLL FOR NEXT