கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி திருநெல்வேலியில் ஆர்ப்பாட்டம் செய்த பாட்டாளி மக்கள் கட்சியினர். படம்: மு.லெட்சுமி அருண் 
Regional02

வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு கோரி பாமக ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், தென்காசியில் பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருநெல்வேலியில் சந்திப்பு ரயில் நிலையம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு திருநெல்வேலி மாநகர் மாவட்டச் செயலாளர் சீயோன் தங்கராஜ் தலைமை வகித்தார். மாநில இணை பொதுச்செயலாளர் இசக்கி, மாநில துணை பொதுச்செயலாளர் இரா.அன்பழகன், நிர்வாகிகள் எம்.அந்தோணிராஜ், முத்துசரவணன், டி.ஜீசஸ் ஜான், ஹரிகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தூத்துக்குடி

நாகர்கோவில்

தென்காசி

SCROLL FOR NEXT