Regional03

எஸ்.எஸ்.வி. பள்ளியில் முப்பெரும் விழா

செய்திப்பிரிவு

நூற்றாண்டு பழமையான கொடுமுடி  சங்கர வித்யாசாலா பள்ளியில் நடந்த முப்பெரும் விழாவில், முன்னாள் பள்ளித் தலைமையாசிரியருக்கு கல்விச்சுடர் வழங்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் 1910-ம் ஆண்டு  சங்கர வித்யாசாலா (எஸ்.எஸ்.வி. மேல்நிலைப்பள்ளி) தொடங்கப்பட்டது.

இப்பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கம் மற்றும் சங்கமித்திரா சுற்றுச்சூழல் கல்வி மற்றும் முன்னேற்ற சங்கம் சார்பில், முன்னாள் மாணவர் சந்திப்பு, மரக்கன்று நடும் விழா மற்றும் முன்னாள் பள்ளி தலைமை ஆசிரியர் கே.பி.சிவசுப்பிரமணியத்துக்கு கல்விச்சுடர் விருது வழங்குதல் என முப்பெரும் விழா நடந்தது.

பள்ளியின் முன்னாள் மாணவரும், கோவை மாவட்ட தேசிய குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்புத் திட்ட இயக்குநர் டி.வி.விஜயகுமார், முன்னாள் பள்ளி தலைமை ஆசிரியர் கே.பி. சுப்பிரமணியத்திற்கு கல்விச்சுடர் விருதினை வழங்கினார்.

தொடர்ந்து, முன்னாள் மாணவ, மாணவியர் தங்களது பள்ளி அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். சங்கமித்திரா சுற்றுச்சூழல் கல்வி மற்றும் முன்னேற்ற அறக்கட்டளை சார்பில், பங்கேற்பாளர்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவில், பள்ளி முன்னாள் ஆசிரியர்கள் வி.கே.பரமசிவம், நல்லசாமி, பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT