ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில், தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை ஊராட்சி ராராமுத்திரைக்கோட்டை கிராமத்தில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா நேற்று நடைபெற்றது.
இதில், பெண் குழந்தைகள் 100 பேருக்கு ஓவியம், மாறுவேடம், கோலம் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் காஞ்சனா தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக சர்வதேச கூடைப்பந்து விளையாட்டு வீராங்கனை மோனிகா ஜெயசீலி கலந்து கொண்டு, பரிசுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில், ஊராட்சி மன்றத் தலைவர்கள் சோழன், சங்கீதா துரை, பள்ளித் தலைமையாசிரியர் கலைச்செல்வி உட்பட பலர் கலந்துகொண்டனர்.