Regional01

20% இட ஒதுக்கீடு கோரி பாமகவினர் ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கோரி தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில் பாமக சார்பில்ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில துணை பொதுச் செயலாளர் இசக்கிமுத்து தலைமை வகித்தார். பாமக மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் குமாரசாமி, அய்யம்பெருமாள், சேது அரிகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் சீதாராமன் வரவேற்றார்.

மாவட்டத் தலைவர் குலாம், இளைஞரணி மாநில செயலாளர் சாகுல் ஹமீது, துணைத் தலைவர் ராம்குமார் உட்பட பலர் பங்கேற்று, கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

SCROLL FOR NEXT