Regional02

415 மாணவர்களுக்கு சைக்கிள்: வாசுதேவநல்லூர் எம்எல்ஏ வழங்கினார்

செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டம் புளியங்குடி அரசு மகளிர் மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் 11, 12-ம் வகுப்பு பயிலும் 415 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில், வாசுதேவநல்லூர் எம்எல்ஏ அ.மனோகரன் கலந்துகொண்டு, சைக்கிள்களை வழங்கினார். மேலும், எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பில் பெஞ்ச், டெஸ்க்குகளையும் வழங்கினார்.

விழாவில் மாவட்ட கல்வி அலுவலர் சிதம்பரநாதன், தலைமை ஆசிரியர்கள் வசந்தா, ஷாஜஹான் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

11, 12-ம் வகுப்பு பயிலும் 415 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.

SCROLL FOR NEXT