தூத்துக்குடி மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக இருந்த பணியிடங்களுக்கு 40 பேர் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு ஆயுதப்படையில் 45 நாட்கள் பயிற்சியளிக்கப்பட்டது. பயிற்சி நிறைவு நாளான நேற்று அணிவகுப்பு நடைபெற்றது. இதனை மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் ஏற்றுக் கொண்டார்.
மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து, ஊர்க்காவல்படை வட்டார தளபதி பாலமுருகன், துணை வட்டார தளபதி கவுசல்யா, பயிற்சியளித்த உதவி ஆய்வாளர்கள் நடராஜன், செல்வக்குமார் மற்றும் காவல்துறையினர் உடனிருந்தனர்.