டெல்லியில் நடந்த வன்முறை சம்பவங் களில் தொடர்புடையதாக கூறி, பல விவசாய சங்கத் தலைவர்களுக்கு எதிராக காவல்துறை சார்பில் ‘லுக் அவுட்’ நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் இருந்து மேலும் ஒரு விவசாய சங்கம் விலகுவதாக அறிவித்துள்ளது.
மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியின் எல்லைப் பகுதிகளில் விவ சாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ஜன.26-ம் தேதி குடியரசு தினத்தன்று டெல்லியில் மாபெரும் டிராக்டர் பேரணி நடத்தப் போவதாக விவசாயிகள் அறிவித்தனர். முதலில் இதற்கு அனுமதி மறுத்த டெல்லி காவல்துறை, பின்னர் பல்வேறு நிபந்தனை களுடன் 3 வழித்தடங்களில் மட்டும் பேரணி நடத்த அனுமதி வழங்கியது.
ஆனால், போலீஸார் விதித்த நிபந் தனைகளை மீறி, அனைத்து சாலைகளி லும் விவசாயிகள் டிராக்டர்களை ஓட்டிச் சென்றனர். அத்துடன், காவல்துறையினர் அமைத்திருந்த தடுப்புகளையும் உடைத் துக் கொண்டு அவர்கள் தலைநகருக்குள் நுழைந்தனர். இதன் உச்சகட்டமாக, செங் கோட்டையை முற்றுகையிட்ட விவ சாயிகள், அங்குள்ள கொடியேற்றும் இடத்தில் சீக்கிய மதக் கொடியை ஏற்றினர். இது, தேசியக் கொடியை அவமதிக்கும் செயலாக கருதப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, செங்கோட்டை யில் இருந்து விவசாயிகளை போலீஸார் அப்புறப்படுத்த முயன்றபோது, இரு தரப்புக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இதில், விவசாயிகள் தாக்கிய தில் 394 பாதுகாப்புப் படையினர் படுகாய மடைந்தனர். பின்னர், போலீஸார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும் விவசாயிகளை கலைத்தனர்.
டெல்லியில் நடந்த இந்த வன் முறைச் சம்பவங்களை தொடர்ந்து, போலீஸார் அதிரடி நடவடிக்கையை தொடங்கியுள்ளனர். முதல்கட்டமாக, வன்முறையில் ஈடுபட்டதாக அடையாளம் காணப்பட்ட 19 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மற்றவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.
இதுதவிர, 50 பேரை பிடித்து போலீ ஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை 25 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், வன்முறை சம்பவங் களில் ஈடுபட்டதாக பல்வேறு விவசாய சங்கத் தலைவர்களுக்கு எதிராக டெல்லி காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. இதன்மூலம் அவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வது தடுக்கப்படும். மேலும், காவல்துறை முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு பல விவசாய சங்கத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு நோட்டீஸ் அனுப் பப்பட்டுள்ளது.
இதனிடையே, போலீஸாரிடம் சரண டைய முடியாது என பாரதிய கிசான் யூனியனின் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் டிகைத் கூறியுள்ளார். இதுகு றித்து செய்தியாளர்களிடம் அவர் கூறும் போது, ‘‘விவசாயிகள் யாரும் வன்முறை யில் ஈடுபடவில்லை. இதற்கு பின்னால் அரசின் சதி இருக்கிறது. கலவர வழக்கு களில் எங்கள் பெயர்களும் சேர்க்கப்பட் டிருக்கின்றன. என்ன நடந்தாலும் போலீஸாரிடம் சரணடைய மாட்டோம். நீதிமன்ற கைது நடவடிக்கைக்கு மட்டுமே உட்படுவோம்’’ என தெரிவித்தார்.
டெல்லி வன்முறை சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், மேலும் ஒரு விவசாய சங்கம், வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. ராஷ்ட்ரிய மஸ்தூர் கிசான் சங்கம், பாரதிய கிசான் யூனியன் (பானு பிரிவு) ஆகியவற்றை தொடர்ந்து, பாரதிய கிசான் யூனியனும் (லோக் சக்தி பிரிவு) தற்போது இந்தப் போராட்டத்தில் இருந்து விலகியுள்ளது.
144 தடை உத்தரவு
இந்தச் சூழலில், உத்தரபிரதேசத்தின் காஸிபூர் எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை உடனடியாக அங்கிருந்து கலைந்து செல்லுமாறு அம் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், அங்கு 144 தடை உத்தரவும் பிறப்பிக் கப்பட்டுள்ளது. அந்த நகரின் எல்லைகள் மூடப்பட்டுவிட்டன. அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை அப்புறப் படுத்தும் நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல, ஹரியாணாவின் சோனி பட், ஜஜ்ஜார், பல்வால் ஆகிய மாவட்டங்களில் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
முதல் தகவல் அறிக்கையில் யார், யார்?
‘ஸ்வராஜ் இந்தியா’ அமைப்பின் தலைவர் யோகேந்திர யாதவ், சமூக ஆர்வலர் மேதா பட்கர், பாரதிய கிசான் யூனியன் தலைவர் (ஹரியாணா பிரிவு) குருநாம் சிங், அந்த சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் டிகைத், விவசாய சங்கத் தலைவர்கள் தர்ஷன் பால், சத்னம் சிங் பன்னு, பூட்டா சிங், ஜோகிந்தர் சிங் உஹ்ரஹா உட்பட 30-க்கும் மேற்பட்டோரின் பெயர் முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
இவர்கள் மீது கொலை முயற்சி, கல வரம் ஏற்படுத்துதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், சதித் திட்டம் தீட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.