TNadu

வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு அறிவிக்காமல் காலம் தாழ்த்துவது கவலையளிக்கிறது: பாமக

செய்திப்பிரிவு

பாமக தலைவர் ஜி.கே.மணி கிருஷ்ணகிரியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி, பாமக, வன்னியர் சங்கம் சார்பில் 6-வது கட்டமாக, இன்று(29-ம் தேதி) 38 மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு மக்கள் திரள் அறப்போராட்டம் நடைபெற உள்ளது.

இதில் பல்வேறு கட்சிகளில் இருக்கக் கூடிய வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள், அவர்கள் சார்ந்த கட்சிக் கொடி, சின்னத்திலேயே பங்கேற்கிறார்கள். தமிழக அரசு, வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வருவது கவலையளிக்கிறது. தேர்தல் கூட்டணி தொடர்பாக இதுவரை பேசவில்லை. இது தொடர்பாக 31-ம் தேதி நிர்வாக குழு கூட்டத்துக்குப் பின்னர், மருத்துவர் ராமதாஸ் அறிவிப்பார். இவ்வாறு ஜி.கே.மணி கூறினார்.

SCROLL FOR NEXT