தைப்பூசத்தையொட்டி கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று நடைபெற்ற திருக்கல்யாண உற்சவம். 
Regional01

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசம்

செய்திப்பிரிவு

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று தைப்பூசத் திருவிழா நடைபெற்றது.

இக்கோயிலில் கடந்த 22-ம் தேதிகொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. 6-ம் நாளான நேற்று தைப்பூசத்தையொட்டி அதிகாலையில் சுப்பிரமணிய சுவாமிக்கு, வள்ளி-தெய்வானை யுடன் திருக்கல்யாணம் நடைபெற் றது.

தொடர்ந்து, வெள்ளை யானையில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. காலை 7 மணி முதல் வெப்பமானி கொண்டு பரிசோதனை செய்யப்பட்டு, முகக்கவசம் அணிந்த பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப் பட்டனர். சுவாமி தரிசனம் செய்த பின்னர், மலையடிவாரத்துக்குச் செல்லுமாறு பக்தர்கள் அறிவுறுத் தப்பட்டனர்.

கரோனா தொற்று காரணமாக, இந்த ஆண்டு தைப்பூசத் தேரோட்டம் நடைபெறவில்லை.

இதேபோல, மேள, தாளங்கள், தாரை, தப்பட்டைகள் இசைப்பதற்கும் அனுமதிக்கப் படவில்லை.இன்றும் (ஜன. 29), நாளையும் காவடி, பால் குடம் எடுத்து வரும் பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 10 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் கோயிலுக்கு வர வேண்டாம், இருசக்கரம், நான்கு சக்கர வாகனங்களில் மலைக்கு வரவும், அன்னதானம் அளிக்கவும் அனுமதி கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள் ளது. இதேபோல, கோட்டை சங்கமேஸ்வரர் கோயில், சுக்கிர வார்பேட்டை பாலதண்டாயுதபாணி சுவாமி கோயில், குமரன் குன்று கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோயில், தென்சேரிமலை மந்திர கிரி வேலாயுத சுவாமி கோயில், குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோயில், கரட்டுமேடு ரத்தினகிரி வேலாயுத சுவாமி கோயில், கருமத்தம்பட்டி சென்னியாண்டவர் கோயில் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு கோயில்களிலும் தைப்பூசத்தையொட்டி நேற்று சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடை பெற்றன.

SCROLL FOR NEXT