Regional02

குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் இருவர் கைது

செய்திப்பிரிவு

திருப்பூர்: திருப்பூர் வீரபாண்டி காவல் எல்லைக்கு உட்பட்ட கோழிப்பண்ணை அருகே லட்சுமி நகரில் சமீபத்தில் நிகழ்ந்த கொலை வழக்கு தொடர்பாக, தென்னம்பாளையம் காட்டுவளவை சேர்ந்த எஸ்.சுபாஷ் சந்திரபோஸ் (24), வீரபாண்டி கல்லாங்காடு பகுதியைச் சேர்ந்த எம்.ரவிகுமார் (28) ஆகிய 2 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சுபாஷ் சந்திரபோஸ் மீது வீரபாண்டி காவல் நிலையத்தில் அடிதடி மற்றும் வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளன. ரவிக்குமார் மீது அடிதடி வழக்கு நிலுவையில் உள்ளது. இருவரும் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்ததால், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாநகர காவல் ஆணையர் க.கார்த்திகேயன் நேற்று முன்தினம் உத்தரவிட்டார். உத்தரவுக்கான நகல்கள், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருவரிடம் வழங்கப்பட்டன.

SCROLL FOR NEXT