மாநில மக்கள் நலன் கருதி, புதுச்சேரி அரசு போர்க்கால நடவடிக்கையாக சேதமடைந்த சாலைகள் அனைத் தையும் சீரமைக்க வேண்டும் எனபுதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியின் திமுக சட்டமன்ற உறுப்பினர் க.வெங்கடேசன் வலியுறுத்தியுள் ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள் ளதாவது:
அண்மையில் புதுச்சேரி முழு வதும் பெய்த தொடர் கனமழை மற்றும் தொடர்ச்சியாக வந்த புயல் களால் புதுச்சேரி மாநகர் மற்றும் புறநகர் சாலைகள் பெருமளவில் சேதமைடைந்துள்ளன.
இதனால் வாகனங்களில் செல்வோர் கடுமையாக பாதிக்கப்படுகின் றனர். குறிப்பாக புதுச்சேரி 100 அடி சாலை, முருங்கப்பாக்கம், கடலூர் பிரதான சாலை, வில்லியனூர் சாலை,காமராஜர் சாலை, சாரம், திருவள் ளுவர் சாலை, மறைமலை அடிகள்சாலை போன்ற மிக முக்கிய சாலைகள் மிகவும் சேதமடைந்து, குண்டும் குழயுமாக காட்சியளிக்கிறது. இதனால் சாலை விபத்துகளும் அதிகரித் துள்ளன.
புதுச்சேரி அரசு, உடனடியாக இந்தச் சாலைகளை சீர்படுத்த வேண்டும். குறைந்தபட்சம், சாலை களில் பள்ளங்களைச் செப்பனிட வேண்டும் என்று தெரிவித் துள்ளார்.