Regional02

கும்பாபிஷேகம்

செய்திப்பிரிவு

மதுரை மாவட்டம் அலங்கா நல்லூர் அருகே த.வடுகபட்டி யில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. கணபதி ஹோமத்துடன் நேற்று முன்தினம் முதல் நாள் யாக சாலை பூஜை தொடங்கியது. நான்கு கால யாகசாலை பூஜைகள் முடிந்தவுடன் கடம் புறப்பாடானது.

அதைத் தொடர்ந்து பல்வேறு புனிதத் தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கோபுர கலசத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் மூலவர் வள்ளி, தெய்வானை, சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

SCROLL FOR NEXT