திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் செயல் அலுவலராக ஐ.ஏ.எஸ். அதிகாரி விஷ்ணுசந்திரன் நியமிக்கப்பட்டுளளார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் செயல் அலுவலராக பணியாற்றிய அம்ரித் கடந்த 4 மாதத்துக்கு முன்பு சென்னை சட்டம் ஒழுங்கு துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அதன்பிறகு இக்கோயில் இணை ஆணையராக சில நாட்களாக பரஞ்ஜோதி கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார். இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருந்ததால், ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் இணை ஆணையர் கல்யாணி கூடுதல் பொறுப்பாக கவனித்துவந்தார். தற்போது, தூத்துக்குடி மாவட்ட கூடுதல் ஆட்சியராக பணியாற்றி வரும் ஐ.ஏ.எஸ். அதிகாரியான விஷ்ணுசந்திரன், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் செயல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.