Regional01

மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் மருத்துவமனை வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரியை தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர். மருத்துவ பல்கலை க்கழகத்தோடு இணைக்க வேண்டும். இக்கல்லூரி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை இதர தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையாக குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவக் கல்லூரி முதல்வர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT