திருப்பத்தூர்: திருப்பத்தூரில் இந்து முன்னணியின் மாவட்ட பொறுப் பாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் சோமேஸ்வரன் தலைமை வகித்தார்.
கோட்டச் செயலாளர் ரவி முன்னிலை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசும்போது, ‘‘இந்து முன்னணி அமைப்பு சார்பில் நடத்தப்படும் சமுதாய சமர்ப்பண நிகழ்ச்சியை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்த வேண்டும். பொதுமக்களிடம் இந்து சமய நம்பிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்’’ என்றார்.