Regional03

‘சசிகலாவின் விடுதலையை வரவேற்கிறோம்’கருணாஸ் கருத்து

செய்திப்பிரிவு

சசிகலாவின் விடுதலையை வரவேற்கிறோம் என நடிகர் கருணாஸ் தெரிவித்தார்.

திருப்பூரில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் 27 ஆண்டுகளுக்கும் மேலாக உண்மையான விசுவாசியாக இருந்து அதிமுகவை நேசித்து வாழ்ந்தவர் சசிகலா.

அவரது விடுதலையை முக்குலத்தோர் புலிப்படை வரவேற்கிறது.

நாங்கள் அதிமுகவுடன் தோழமை கட்சியாகவே இருக்கிறோம். வரும் தேர்தலில் கூடுதலாக ஒரு தொகுதி கேட்போம். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகியோரை தேவரினம் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

இதை விரைவாக நிறைவேற்ற வேண்டும். முக்குலத்தோர் சமுதாயத்துக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT