Regional01

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக்கோரிவருவாய்த்துறையினர் விடுப்பு எடுத்து போராட்டம்

செய்திப்பிரிவு

வருவாய்த்துறையில் அனைத்து அலுவலர்களுக்கும் மேம் படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்க வேண்டும். மாவட்டங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், இரவு காவலர், பதிவுரு எழுத்தர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் நேற்று விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினர். அதன்படி, கடலூர் மாவட்டத்தில் வருவாய்த்துறையில் பணியாற்றும் சுமார் 400 பேரில் 345 பேர் தற்செயல் விடுப்பு எடுத்தனர். இதனால் வட்டாட்சியர் அலுவலகங்களில் சான்றிதழ் வழங்குதல், பட்டா பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெறவில்லை.

SCROLL FOR NEXT