Regional02

கள்ளக்குறிச்சியில் சாலை பாதுகாப்பு கண்காட்சி

செய்திப்பிரிவு

அரசு போக்குவரத்து கழக பணிமனை சார்பில் பொதுமக்களுக்குவிழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கள்ளக்குறிச்சி பேருந்துநிலையத்தில் சாலை பாதுகாப்பு கண்காட்சி அமைக்கப்பட்டிருந் தது. இக்கண்காட்சியை ஆட்சியர் கிரண்குராலா திறந்து வைத்தார். அதிவேகத்துடன் சென்று வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் புகைப்படங்கள் இக்கண்காட்சி யில் வைக்கப்பட்டு இருந்தன. தலைக்கவசம் அணியாமல் வாகனத்தில் சென்று அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த படங்களும் இடம்பெற்றிருந்தன. மேலும், விபத்து விழிப்புணர்வு தொடர்பான துண்டறிக்கைகளை ஆட்சியர் வழங்கினார்.

SCROLL FOR NEXT