Regional01

வருவாய்த் துறை அலுவலர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம்

செய்திப்பிரிவு

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பாரதி வளவன் தலைமையில் அச்சங்கத்தினர் 113 பேர் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அலுவலக உதவியாளர் முதல் வட்டாட்சியர் வரை அனைத்து வருவாய்த் துறை அலுவலர்களுக்கும் மேம்படுத்த பட்ட ஊதியம் வழங்க வேண்டும். புதிதாக நியமனம் செய்யப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட தலைநகரங்களில் அடிப்படை பயிற்சி மற்றும் நில அளவை பயிற்சி அளிக்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

புதிய ஓய்வூதிய திட்டத்தைக் கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

SCROLL FOR NEXT