Regional02

பட்டா கத்தியில் கேக் வெட்டிய இளைஞர்கள்

செய்திப்பிரிவு

திருப்பூர் போயம்பாளையம் சக்தி நகர் பகுதி பொதுமக்கள், அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் நேற்று அளித்த மனுவில், "எங்களது பகுதியில் கடந்த 25-ம் தேதி இரவு சதீஷ், முகிலன், ஜான்சன் மற்றும் 30 பேர் சேர்ந்து ரேஷன் கடை அருகே மது அருந்திவிட்டு பட்டா கத்தியில கேக் வெட்டியுள்ளனர். மறுநாள் அதிகாலை வரை பொதுமக்களை தூங்கவிடாமல், பெண்களை தகாத வார்த்தைகளில் பேசி அராஜகத்தில் ஈடுபட்டனர். நாள்தோறும் குடியிருப்பு பகுதிக்குள் அவர்கள் ஏதாவது ஒருவகையில் பிரச்சினை செய்து வருகின்றனர். இதுகுறித்து பலமுறை அவர்களிடம் கூறியும், தொடர்ந்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். இப்பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளனர்.

அனுப்பர்பாளையம் போலீஸார் கூறும்போது, "புகார் குறித்து ஆய்வு மேற்கொண்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றனர்.

SCROLL FOR NEXT