Regional02

வட்டாட்சியர் அலுவலகம் அருகே மதுக்கடை திறக்க பொது மக்கள் எதிர்ப்பு

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே உள்ள சேக்குபேட்டை சாலியர் தெருவில் அரசு மதுக்கடை செயல்பட்டு வந்தது. பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக கடந்த 6 மாதங்களாக மூடியிருந்த நிலையில் தற்போது அந்தக் கடை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து அந்தப் பகுதி மக்கள் சுமார் 40 பேர் கடையை மூடக் கோரி நேற்று முன்தினம் எதிர்ப்பு தெரிவித்தனர். கடை முன்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த சிவகாஞ்சி போலீஸார் இவர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர்.டாஸ்மாக் அதிகாரிகளிடம் பேசி, இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இந்தப் பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

SCROLL FOR NEXT