Regional02

விழுப்புரத்தில் நாளை ஜோதி தரிசனம் விழா

செய்திப்பிரிவு

விழுப்புரம் அருள் மாளிகை அன்பர்கள் ஒன்றிணைந்து ஜோதி தரிசன விழா கொண்டாட உள்ளனர்.

இதுகுறித்து நிர்வாக அறங்கா வலர் ஜெய அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை:

இன்று (ஜன.27) அருட்பெருஞ் ஜோதி தீபம் ஏற்றுதல்,சுத்த சன்மார்க்க கொடி கட்டுதல், திரு அருட்பா இசை நிகழ்ச்சி, சுத்த சன்மார்க்க கருத்தரங்கம், ஜோதி வழிபாடு, வள்ளலார் வரலாறு வில்லுப்பாட்டு, யோகாசனம், பரதநாட்டியம், சிறப்புப்பட்டிமன்றம் ஆகியவை நடைபெறுகிறது.

நாளை விழுப்புரம் அருள் மாளிகையில் ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. 3 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT