Regional02

ஊருணி நீரில் மூழ்கி கொத்தனார் மரணம்

செய்திப்பிரிவு

ராமநாதபுரம் அருகே ஊருணி நீரில் மூழ்கி கொத்தனார் உயிரிழந்தார்.

ராமநாதபுரம் அருகேயுள்ள இடையர்வலசை கிராமத்தைச் சேர்ந்தவர் வீரபாண்டி (34). கொத்தனாரான இவர் நேற்று முன்தினம் மாலையில் அப்பகுதியில் உள்ள ஊருணியில் குளிக்கச் சென்றார். இந்நிலையில் அவர் கரை திரும்பாதது அன்றிரவு தெரியவந்தது. அவரது குடும்பத்தினர் இரவு முழுவதும் தேடிய நிலையில் நேற்று காலை பஜார் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

தீயணைப்புத் துறையினர் ஊருணியில் தேடி, அவரது உடலை மீட்டனர். வீரபாண்டிக்கு மனைவி, மகன் உள்ளனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT