Regional01

மது விற்ற 2 பேர் கைது200 மது பாட்டில் பறிமுதல்

செய்திப்பிரிவு

குமாரபாளையத்தில் அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 200 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

குடியரசு தின விழாவை முன்னிட்டு மதுபானக் கடைகளை மூட அரசு உத்தரவிட்டிருந்தது. எனினும், தடையை மீறி குமாரபாளையத்தில் மது விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில் குமாரபாளையம் எம்ஜிஆர் நகர், முனியப்பன் கோயில் பகுதியில் காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்கு மதுபான விற்பனையில் ஈடுபட்ட கணேசன் (45), ராமசாமி (50) ஆகிய இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். இருவரிடமும் இருந்து 200 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT