Regional02

அமெச்சூர் டென்னிஸ் சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான டென்னிஸ் போட்டி

செய்திப்பிரிவு

காஞ்சிபுரத்தில் கடந்த 23 மற்றும் 24-ம் தேதிகளில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுக்கான டென்னிஸ் போட்டிகள் நடைபெற்றன. இதில் காஞ்சிபுரம், சென்னை, வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இருந்து 40-க்கும் மேற்பட்ட டென்னிஸ் வீரர்கள் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு வழக்கறிஞர் மதனகோபால் பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ், பாலமுருகன், நீச்சல் விளையாட்டுப் பயிற்சியாளர் ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அமெச்சூர் டென்னிஸ் அமைப்பின் தலைவர் குணாளன், செயலர் அசோக் நிர்மல்ராஜ், பொருளர் பாரூக் உள்ளிட்டோர் பங்கேற்று போட்டிகளை முன்னின்று நடத்தினர்.

SCROLL FOR NEXT