Regional03

வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடத்த அதிமுகவுக்கு தகுதி: கே.டி.ராஜேந்திரபாலாஜி

செய்திப்பிரிவு

விருதுநகரில் அதிமுக இளைஞரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவர் விஜயகுமாரன் தலைமை வகித்தார். வில்லிபுத்தூர் எம்எல்ஏ சந்திரபிரபா முன்னிலை வகித்தார். அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசியதாவது: தமிழ் மொழிக்காக போராடியவர்களுக்காக வீரவணக்க நாள் நடத்தும் தகுதியுடைய கட்சி அதிமுக தான். திமுகவில் உள்ளவர்கள் அரசியல் வியா பாரிகள். 11 அரசு மருத்துவக் கல்லூரிகளை கொண்டு வந்தது அதிமுக ஆட்சி. அதிமுக ஆள வேண்டும். தமிழக மக்கள் வாழ வேண்டும். வரும் தேர்தலில் திமுகவை தோற்கடிப்போம் என சபதம் ஏற்போம் என்றார்.

SCROLL FOR NEXT