Regional01

மரத்தில் கார் மோதி முதியவர் மரணம்

செய்திப்பிரிவு

பெரம்பலூர் மாவட்டம் வாலி கண்டபுரம் அருகே உள்ள அழகா புரி கிராமத்தைச் சேர்ந்தவர் வரதராஜன் மகன் ஆனந்த் (34). இவர், கோவில்பட்டியிலிருந்து தனது மாமனார் ரெங்கராஜுடன் (70) நேற்று தனது காரில் வந்துகொண்டிருந்தார்.

திருச்சி- சென்னை நெடுஞ் சாலையில் உள்ள இரூர் அருகே வந்தபோது, எதிர்பாராதவிதமாக சாலையோரத்தில் இருந்த மரத்தில் கார் மோதி கவிழ்ந்தது. சிறிது நேரத்தில் கார் தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்த பெரம்பலூர் தீயணைப்பு படையினர் அங்கு சென்று தீயை அணைத்தனர். எனினும், கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. விபத் தில் காயமடைந்த ஆனந்த், ரெங்கராஜ் ஆகியோர் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டனர். இதில் ரெங்க ராஜ் உயிரிழந்தார். விபத்து குறித்து பாடாலூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT