Regional01

தேசிய வாக்காளர் தின பேரணி, உறுதிமொழியேற்பு

செய்திப்பிரிவு

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, தஞ்சாவூர், நாகை, திருவாரூர், அரியலூர், பெரம் பலூர், கரூர், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ஆட்சியர் அலுவலகங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில், புதிய இளம் வாக்காளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆட்சியர் கள் தலைமையில் அனைத்துத் துறை அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர். பல்வேறு இடங்களில் வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பெரம்பலூரில் நடைபெற்ற நிகழ்ச்சி யில் மாவட்டத்தின் மிக மூத்த வாக்காளரான 103 வயதான சோ.வள்ளியம்மை பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப் பட்டார்.

காரைக்கால் மாவட்ட தேர்தல் துறை, சுவீப் அமைப்பு ஆகிய வற்றின் சார்பில், வரிச்சிக்குடியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் தேசிய வாக்காளர் தின விழா நடைபெற்றது.

SCROLL FOR NEXT