Regional01

கண் சிகிச்சை இலவச முகாம்

செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டம், செங்கோட்டை நூலகத்தில் விவேகானந்த கேந்திரம், பார்டர் மர ஆலை உரிமையாளர் கள் சங்கம், திருநெல்வேலி மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம், திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. மர ஆலை உரிமையாளர் கள் சங்க நிர்வாகி பிரவீன்குமார் படேல் தலைமை வகித்தார். பொறியாளர் ராமகிருஷ்ணன், மோகன்படேல், கேந்திர கமிட்டி பொறுப்பாளர் ராணி ராம்மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . நுாலகர் ராமசாமி வரவேற்றார்.முகாமில் 320 பேர் கலந்து கொண்டனர் . அவர்களில் 26 பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டு, திருநெல்வேலிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் . 18 பேருக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டன.

SCROLL FOR NEXT