தூத்துக்குடி தருவை மைதானத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு ஆயுதப்படை காவலர்களின் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. படம்: என்.ராஜேஷ் 
Regional03

குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு

செய்திப்பிரிவு

தூத்துக்குடியில் குடியரசு தின விழாவுக்கான காவல்துறை அணிவகுப்பு ஒத்திகை நேற்று நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில், தருவை மைதானத்தில் இன்று காலை 8.05 மணிக்கு மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தேசிய கொடியேற்றி, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார்.

இதனை முன்னிட்டு மாவட்ட ஆயுதப்படை காவல் துறையினரின் அணி வகுப்பு ஒத்திகை, ஆட்சியர் தலைமையில், எஸ்பி எஸ்.ஜெயக்குமார் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. காவல் ஆய்வாளர் ஜாகீர் உசேன் தலைமை வகித்தார்.

பலத்த பாதுகாப்பு:

இதேபோல் கடலோர பகுதிகளில் கடலோர பாதுகாப்பு குழும போலீஸார் ஆய்வாளர் சைரஸ் தலைமையில் ரோந்து படகு மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் சுமார் 2,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT