மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தூத்துக்குடி டூவிபுரத்தில் அதிமுக கட்சி அலுவலகம் முன் நேற்று நடைபெற்றது.
தெற்கு மாவட்ட அதிமுக மாணவரணி செயலாளர் பில்லா விக்னேஷ் தலைமை வகித்தார். தெற்கு மாவட்ட அதிமுகசெயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்எல்ஏ அஞ்சலி செலுத்தினார். மாநில அமைப்பு சாரா ஓட்டுநர் அணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி, மாவட்டஅவைத்தலைவர் திருப்பாற் கடல், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.