Regional02

பேருந்து மோதி முதியவர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

திருப்பத்தூர் அருகே தனியார் பேருந்து மோதியதில் முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் தண்ணீர் பந்தல் பகுதியைச் சேர்ந்த முனிசாமி (75). இவர், நேற்று மாலை தண்ணீர் பந்தல் சாலை வழியாக நடந்துச் சென்றபோது அவ் வழியாக வந்த தனியார் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே முனிசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வந்த தகவலின் பேரில் திருப்பத்தூர் கிராமிய காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று முதியவர் உடலை கைப்பற்றினர். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT