TNadu

தாய், மகள் உட்பட3 பேர் நீரில் மூழ்கிஉயிரிழப்பு

செய்திப்பிரிவு

திண்டுக்கல் மாவட்டம் அருகே காவேரிசெட்டிபட்டியைச் சேர்ந்த பரமசிவம் மனைவி ராதா (38), மகள் பவ்யா(12), பக்கத்து வீட்டைச் சேர்ந்த தண்டபாணி மகள் சரஸ்வதி (12). ஆகியோர் மேட்டுக்கடை அருகேயுள்ள குளத்தில் நேற்று குளிக்கச் சென்றனர்.

அப்போது சிறுமிகள் ஆழமான பகுதிக்குச் சென்றதால் நீரில் மூழ்கினர். இவர்களைக் காப்பாற்றச் சென்ற ராதாவும் நீரில் மூழ்கி இறந்தார். இவர்களின் உடல்களை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். இதுகுறித்து சாணார்பட்டி போலீஸார் விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT