தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை சார்பில், 32-வது சாலைப் பாதுகாப்பு மாத விழா ஜனவரி 18 முதல் பிப்ரவரி 17-ம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது.
இதையொட்டி, திருப்பூர் மாநகர காவல்துறை மற்றும் திருப்பூர்வடக்கு, தெற்கு வட்டாரப் போக்குவரத்து துறை சார்பில், தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. ஆட்சியர் கே.விஜயகார்த்திகேயன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பல்லடம் சாலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கி, நகரின் முக்கிய சாலைகளின் வழியாக வீரபாண்டி சென்று தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சென்று பேரணி நிறைவு பெற்றது.
அவிநாசி
காங்கயம்
தன்னார்வலர்கள் உட்பட 150-க்கும் மேற்பட்டோர் தலைக் கவசம் அணிந்து இருசக்கர வாகனங்களில் பங்கேற்றனர். காங்கயம் காவல் நிலைய ரவுண்டானா அருகே தொடங்கி திருச்சி, தாராபுரம், கோவை, திருப்பூர் சாலைகள் வழியாக சென்று, தொடங்கிய இடத்தில் நிறைவு பெற்றது.
உடுமலை
தாராபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் செந்தில்குமார், உடுமலை காவல் துணைக் கண்காணிப்பாளர் ரவிக்குமார், போக்குவரத்து ஆய்வாளர் செல்வதீபா ஆகியோர் கலந்துகொண்டனர்.
காவல்துறை, ஊர்க்காவல் படையினர், தனியார் வாகன ஓட்டுநர் பயிற்சி பள்ளி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
உடுமலை குட்டைத்திடலில் தொடங்கிய விழிப்புணர்வு ஊர்வலம் தளி சாலை, பழநி சாலை, பேருந்து நிலையம், ராஜேந்திரா சாலை என முக்கிய சாலைகளின் வழியாக மீண்டும் குட்டைத்திடலில் நிறைவடைந்தது.