திண்டிவனத்தில் விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது. 
Regional03

விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம்

செய்திப்பிரிவு

விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் திண்டிவனத்தில் நேற்று நடைபெற்றது.

திமுக மாவட்ட அவைத் தலைவர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார்.விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளரும் செஞ்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினரான மஸ்தான் சிறப்புரையாற்றினார்.

எம்எல்ஏக்கள் மாசிலாமணி, சீதாபதி சொக்கலிங்கம்,மாநில விவசாய அணி இணை செயலாளர் செந்தமிழ்செல்வன், தலைமை நிர்வாக குழு உறுப்பினர் செஞ்சி சிவா, திண்டிவனம் நகர செயலாளர் கபிலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நாளை வடக்கு மாவட்டம் செஞ்சி, திண்டிவனம் ஆகிய தொகுதிகளில் மொழிப்போர் தியாகிகள் பொதுக்கூட்டம் சிறப்பாக நடத்தப்படும்.செஞ்சி, மயிலம், திண்டிவனம் ஆகிய தொகுதிகள் வாரியாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் வழக்கறிஞர்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

SCROLL FOR NEXT