Regional02

மதுரை - கன்னியாகுமரி நான்குவழிச் சாலையில் அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து

செய்திப்பிரிவு

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மதுரை- கன்னியாகுமரி நான்குவழிச் சாலையில் அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாயின.

திருச்செங்கோட்டிலிருந்து திருநெல்வேலி நோக்கி போர்வெல் லாரி ஒன்று விருதுநகர் வழியாக நேற்று காலை சென்று கொண்டிருந்தது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நான்குவழிச் சாலையில் சென்றபோது, பின்னால் பெங்களூருவிலிருந்து கன்னியாகுமரி சென்ற கார் முந்திச் செல்லும்போது லாரி மீது உரசியது.

இதனால், போர்வெல் லாரி ஓட்டுநர் லாரியை இடதுபுறம் திருப்பினார். அப்போது பின்னால் அய்யம்பாளையத்திலிருந்து சாத்தூர் அருகே உள்ள குண்டலகுத்தூர் கோயிலுக்குச் சென்ற மற்றொரு கார் மீது லாரி மோதியது. இதில் கார் சாலையின் தடுப்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளானது.

அடுத்தடுத்து 3 வாகனங்கள் விபத்துக்குள்ளானதால் அப்பகுதியில் போக்குவரத்துத் தடை ஏற்பட்டது. வாகனங்கள் அனைத்தும் அணுகு சாலையில் திருப்பி விடப்பட்டன.

இந்த விபத்தில் குண்டலகுத்தூர் கோயிலுக்குச் சென்ற முத்துமாரி (37) என்பவர் காயமடைந்தார். அவர் அவசர ஊர்தி மூலம் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். விபத்துக் குறித்து சூலக்கரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT