Regional03

தமிழ் மொழி, கலாச்சாரத்துக்கு மத்திய அரசு ஊறு விளைவிப்பு ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

தமிழ் மொழி, கலாச்சாரத்துக்கு மத்திய அரசு ஊறு விளைவிக்கிறது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

காங்கிரஸ் பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் திருப்பத்தூரில் நடைபெற்றது. இதில் அவர் பேசியதாவது: தேர்தலில் மக்கள் துணையோடு அதிமுக, பாஜகவை தோற்கடிக்க வேண்டும். தமிழ் மொழி, கலாச்சாரத்துக்கு மத்திய அரசு ஊறு விளைவிக்கிறது.

ஒரே நாடு ஒரே தலைவர் என்ற கொள்கையை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தன்னை விவசாயி என்று கூறிக்கொள்ளும் பழனிசாமி அண்மையில் டெல்லி சென்றபோது அங்கு போராட்டம் நடத்தும் விவசாயிகளை சந்தித்து ஆறுதல் கூறியிருக்கலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் கார்த்தி சிதம்பரம் எம்.பி., திருப்பத்தூர் தொகுதி பொறுப்பாளர் பழனியப்பன், நகர்த் தலைவர் திருஞானசம்மந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT