Regional01

ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா

செய்திப்பிரிவு

மனிதநேய ஜனநாயக கட்சியின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக ஆம்புலன்ஸ் வாகனம் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி மற்றும் சமூக நல்லிணக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் இப்னுமாஜா தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் முகமது நஜீப் முன்னிலை வகித்தார். கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி எம்எல்ஏ, பொருளாளர் ஹாரூன் ரசீது, துணை பொதுச் செயலாளர் தைமியா, மாநில துணைச் செயலாளர் சாகுல் ஹமீது கலந்து கொண்டனர். ஆறுமுகநேரி காவல் ஆய்வாளர் செல்வி ஆம்புலன்ஸ் சேவையை அர்ப்பணித்து தொடங்கி வைக்க, காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை இணைச் செயலாளர் எம்.எம்.சம்சுதீன் பெற்றுக்கொண்டார்.

SCROLL FOR NEXT