தூத்துக்குடியில் ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்கு எஸ்பி ஜெயக்குமார் பரிசு வழங்கினார். 
Regional01

சாலை பாதுகாப்பு விழா விழிப்புணர்வு ஸ்கேட்டிங்

செய்திப்பிரிவு

தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு தூத்துக்குடியில் விழிப்புணர்வு ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் மற்றும் விளையாட்டு சங்கம் சார்பாக 3-ம் மைல் எப்சிஐ குடோன் அருகில் நடைபெற்ற இந்த போட்டியை எஸ்பி ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவி யர் கலந்து கொண்டனர். வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. தூத்துக்குடி தென்பாகம் காவல் ஆய்வாளர் ஆனந்தராஜன், போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் மயிலேறும் பெருமாள், உதவி ஆய்வாளர் வெங்கடேசன் கலந்துகொண்டனர்.

ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் மற்றும் விளையாட்டு சங்கத் தலைவர் ஜூலியா கிரானாப், செயலாளர் சுரேஷ்குமார், பொருளாளர் சரவணகுமார் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

SCROLL FOR NEXT