திருவண்ணாமலை மாவட்டத்தில் தனி நபர்கள், அம்மா சிமெண்ட் பெற கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளது என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் அம்மா சிமெண்ட் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலை ரூ.190-ல் இருந்து ரூ.216-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டம், முதலமைச்சரின் சூரிய ஒளியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம் மற்றும் தனி நபர் இல்ல கழிப்பறை திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மட்டும் வருமான வரம்பு இல்லாமல் அம்மா சிமெண்ட் தொடர்ந்து வழங்கப்படும்.
3 லட்சம் ஆண்டு வருமானம்
சிமெண்ட் மூட்டைகள் குறைப்பு