Regional01

சேலத்தில் 25-ம் தேதி குடிநீர் நிறுத்தம்

செய்திப்பிரிவு

சேலம் மாநகராட்சியின் தனிக்குடிநீர் திட்ட குடிநீர் விநியோகக் குழாயில் ஏற்பட்டுள்ள குடிநீர் கசிவுகளை சரி செய்யும் பணிகள் மற்றும் பராமரிப்புப் பணிகள் வரும் 25-ம் தேதி நடைபெறவுள்ளது. எனவே, சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வரும் 25-ம் தேதி ஒரு நாள் மட்டும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. எனவே, பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இவ்வாறு மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT