Regional02

கூட்டுறவு சங்கம் மூலம் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.42 லட்சம் கடன்

செய்திப்பிரிவு

செங்கல்பட்டை அடுத்த மேலேரிபாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு தொழில் கடன் வழங்கப்பட்டது. கூட்டுறவு சங்கத் தலைவர் சல்குரு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் 7 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு தொழில் கடனாக ரூ.42.5 லட்சம் வழங்கினார்.

இதில் கூட்டுறவு சங்க செயலர் மேரிசெல்வி, பி.வி.களத்தூர், மேலேரிபாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர்கள் அரிகிருஷ்ணன், கோவிந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT