தியாகையில் மினி கிளினிக்கை திறந்து வைத்து கர்ப்பிணி பெண்களுக்கு அம்மா ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கும் ஆட்சியர் கிரண் குராலா. 
Regional01

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 4 இடங்களில் மினி கிளினிக் திறப்பு

செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாக துருகம் ஒன்றியம் தியாகை, உல கங்காத்தான் மற்றும் சின்ன சேலம் ஒன்றியம் செம்பாகுறிச்சி ஆகிய கிராமங்களில் மினி கிளினிக் நேற்று திறக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் கிரண் குராலா, கள்ளக்குறிச்சி சட்டப் பேரவை உறுப்பினர் பிரபு ஆகியோர் நேற்று இதனை தொடங்கி வைத்தனர். அப்போது, கர்ப் பிணி பெண்களுக்கு அம்மா ஊட் டச்சத்து பெட்டகங்களை பிரபு வழங்கினார்.

இந்த மினி கிளினிக்குகளில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் மற்றும் உதவியாளர் என மூவர் காலை 8 முதல் நண்பகல் 12 மணிவரையிலும், மாலை 4 முதல் இரவு 8 மணி வரையிலும் காய்ச்சல் உள்ளிட்ட சிறு நோய்களுக்கு சிகிச்சை அளிப்பர்.

இதன் மூலம் உலகங்காத்தான் கிராமத்ததைச் சேர்ந்த 5,090 பேர், செம்பாகுறிச்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த 4,300 பேர், செம்பாகுறிச்சி மற்றும் அதனைச் சுற்றிள்ள கிராமத்தைச் சேர்ந்த 4,500 பேர்பயன்பெறுவர்.

இந்நிகழ்ச்சியில் வட்டார மருத் துவ அலுவலர்கள் மதியழகன், சந்தோஷ்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

காலை 8 முதல் நண்பகல் 12 மணிவரை, மாலை 4 முதல் இரவு 8 மணி வரை சிகிச்சை அளிப்பர்.

SCROLL FOR NEXT