Regional01

மனுநீதி திட்ட முகாம் 122 பயனாளிகளுக்கு உதவி

செய்திப்பிரிவு

ஈரோடு குமரன் குட்டையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மனுநீதி திட்ட முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தலைமை வகித்தார். சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் சாலை, சாக்கடை, குடிநீர் உட்பட பல்வேறு அடிப்படை வசதிகள் கேட்டு மனு அளிக்கப்பட்டன. அவற்றின் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார். முன்னதாக 122 பயனாளிகளுக்கு ரூ.13 லட்சத்து 63 ஆயிரம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முன்னாள் துணை மேயர் கே.சி.பழனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT