Regional01

கூட்டுறவு வங்கி உதவியாளர் பணி நேர்முக தேர்வில் பங்கேற்காத 39 பேர்

செய்திப்பிரிவு

சேலம் மாவட்ட கூட்டுறவு வங்கி உதவியாளர் பணி நேர்முக தேர்வில் 39 பேர் பங்கேற்கவில்லை.

சேலம் மத்திய கூட்டுறவு வங்கியில் 114 உதவியாளர் காலி பணியிடமும், இதர கூட்டுறவு நிறுவனங்களில் 52 உதவியாளர் காலி பணியிடத்துக்கும் என மொத்தம் 166 பணியிடத்துக்கு இணையதளத்தில் கடந்த மே 31-ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த பணியிடத்துக்கான எழுத்து தேர்வு கடந்த நவம்பர் மாதம் நடத்தப்பட்டது. தேர்வு முடிவு கடந்த டிசம்பர் 23-ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் தகுதி பெற்ற 340 பேரிடம் நேர்காணல் கடந்த மூன்று நாட்களாக நடந்தது. இதில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உதவியாளர் காலிபணியிடங்களுக்கு 207 பேரும், இதர கூட்டுறவு நிறுவன பணியிடங்களுக்கு 94 பேரும் நேர்முக தேர்வில் பங்கேற்றனர். நேர்முக தேர்வில் 39 பேர் பங்கேற்கவில்லை.

SCROLL FOR NEXT